உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பொதுமக்களுக்கு இடையூறு தந்த கால்நடைகள் பிடிப்பு

பொதுமக்களுக்கு இடையூறு தந்த கால்நடைகள் பிடிப்பு

கீழக்கரை: கீழக்கரை நகராட்சியில் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏராளமான கால்நடைகள் சுற்றி திரிந்தன. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் வீடுகளில் இருந்து அவிழ்த்து விடக்கூடிய மாடுகள் பெரும் தொல்லை தந்தன. கீழக்கரை நகராட்சி கமிஷனர் ரெங்கநாயகி மற்றும் சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா தலைமையில் நகராட்சி பணியாளர்கள் 25 கால்நடைகளை பிடித்து நகராட்சி முன்புறமுள்ள கூடத்தில் பாதுகாப்பாக அடைத்தனர். இதையடுத்து 48 மணி நேரத்திற்குள் ரூ. 5000 வீதம் கால்நடை ஒன்றுக்கு அபராதம் செலுத்தி உரிமையாளர்கள் மீட்டுக் கொள்ளலாம் தவறும் பட்சத்தில் உள்ளாட்சி அமைப்பு விதிகளின்படி பகிரங்கமாக பொது ஏலம் விடப்படும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை