மேலும் செய்திகள்
இன்று மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
25-Feb-2025
ராமநாதபுரம்:தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் 2024ல் முடிக்கப்பட வேண்டிய ரூ.555 கோடி பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் 2009ல் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ரூ.616 கோடியில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தினமும் 10 லட்சம் லிட்டர் குடிநீர் குறைந்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காண திருச்சி காவிரி ஆற்றுப்படுகையில் ஐந்தாவது புதிய கிணறு அமைத்து சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 3163 குடியிருக்களுக்கு குழாய்கள் புதிதாக மாற்ற திட்டமிடப்பட்டது.ரூ.555 கோடியில் பணிகள் 2023 நவம்பரில் துவங்கியது. அக்.,2024 நிறைவு பெற வேண்டும். ஆனால் இதுவரை முடிக்கப்படவில்லை. ஏப்.,மே மாதங்களில் ராமநாதபுரத்தில் குடிநீர் பிரச்னை மேலும் அதிகரிக்கும் என்பதால் புனரமைப்பு பணிகளை விரைவில் முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது. குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் கூறுகையில், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் புனரமைப்புத் திட்டத்தில் திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் வழிதடத்தில் பிரதான குழாய்களை இணைக்கும் பணிகள் முடிந்துள்ளன. விரைவில் புதிய மோட்டார் பொருத்தப்பட்டு பம்பிங் சோதனை செய்யப்பட்டு ஏப்ரலில் பயன்பாட்டிற்கு வரும் என்றனர்.
25-Feb-2025