உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காவிரி குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

காவிரி குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருவாடானை: திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சின்னக்கீர மங்கலத்தில் இருந்து தேவகோட்டை செல்லும் ரோட்டில் காவிரி குடிநீர் குழாய் உடைந்து வீணாக ரோட்டில் செல்கிறது. சின்னக்கீரமங்கலம் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களுக்கு குழாய் வழியாக காவிரி கூட்டு குடிநீர் வினியோகிக்கப் படுகிறது. குழாய் உடைப்பால் கிராமங்களுக்கு போதிய குடிநீர் செல்லாததால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெயிலின் தாக்கம் காரணமாக குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில் மக்களுக்கு பயனில்லாமல் குடிநீர் வீணாகிறது. குடிநீர் வடிகால் வாரிய அலு வலர்கள் குழாய் உடைப்பை சரி செய்து தடையில்லாமல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை