உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துார் அருகே வீணாகும் காவிரி குடிநீர்

முதுகுளத்துார் அருகே வீணாகும் காவிரி குடிநீர்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் -ராமநாதபுரம் ரோடு பூசேரி விலக்கு அருகே செல்லும் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய் மூலம் காவிரி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. முதுகுளத்துார் -ராமநாதபுரம் ரோடு பூசேரி விலக்கு அருகே செல்லும் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இதனால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இதே போன்று அடிக்கடி நடப்பதால் மக்கள் குடிநீருக்காக அவதிப்படுகின்றனர். எனவே காவிரி குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !