மேலும் செய்திகள்
காவிரி குழாயில் உடைப்பு; குடிநீர் வீணாகிறது
06-Jul-2025
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கமுதி ரோட்டில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு காவிரி குடிநீர் வீணாகியது. முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய் மூலம் காவிரி குடிநீர் வழங்கப்படுகிறது. கமுதி ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே 5க்கும் மேற்பட்ட இடங்களில் செல்லும் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி கழிவுநீரில் கலக்கிறது. இதனால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. அது மட்டும் இல்லாமல் ரோட்டோரத்தில் உடைந்து ஓடுவதால் ரோடு சேதமடைந்து வருகிறது. இரவு நேரத்தில் ரோடு சேறும் சகதியுமாக இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் இதேபோன்று அடிக்கடி நடப்பதால் மக்கள் குடிநீருக்காக அவதிப்படுகின்றனர். எனவே காவிரி குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
06-Jul-2025