உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டிஜிட்டல் பண பரிவர்த்தனை கட்டணம் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: பரமக்குடி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

டிஜிட்டல் பண பரிவர்த்தனை கட்டணம் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: பரமக்குடி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

பரமக்குடி: பரமக்குடி வியாபாரிகள் சங்கம் சார்பில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் கட்டண வரி விதிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பரமக்குடி வியாபாரிகள் சங்கத்தில் அனைத்து வியாபாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. தலைவர் போஸ் தலைமை வகித்தார். அப்போது வியாபாரிகளையும், பொதுமக்களையும் பாதிக்கும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை கட்டண வரி விதிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தற்போது பூ வியாபாரம் முதல் மருத்துவம் வரை அனைவரும் டிஜிட்டல் முறைக்கு மாறி உள்ளனர். இதனால் கட்டண வரி விதிப்பு என்பது சிறு, குறு வியாபாரிகள் மற்றும் பொது மக்களையும் பாதிக்கும். ஆகவே மத்திய அரசு உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்றனர். தொடர்ந்து அம்மன் சன்னதியில் உள்ள வியாபாரிகள் சங்கம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், அனைத்து வியாபாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !