உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சி.இ.ஓ., பொறுப்பேற்பு

சி.இ.ஓ., பொறுப்பேற்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் முதன்மை கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்தார். அவர் பதவி உயர்வில் கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசியில் பணிபுரிந்த எல்.ரெஜினி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு தென்காசியில் இருந்து வந்திருந்த தலைமையாசிரியர்கள் மற்றும் ராமநாதபுரம் கல்வித்துறை அதிகாரிகள், அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ