மேலும் செய்திகள்
திருப்புத்துாரில் இன்று சம்பக சஷ்டி விழா
01-Dec-2024
திருப்புத்துாரில் டிச.1 சம்பக சஷ்டி விழா
19-Nov-2024
முதுகுளத்துார்:முதுகுளத்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள கால பைரவருக்கு 13ம் ஆண்டு சம்பக சஷ்டி விழா நடக்கிறது. இதையடுத்து டிச.1ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினந்தோறும் பைரவருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது.தற்போது சம்பக சஷ்டி நிறைவு விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கி கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கும்ப பூஜை, அஷ்ட பைரவர் யாகம், மகா பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்பு பைரவருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உட்பட 21 வகை அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பைரவர் அஷ்டமி குழு விழா கமிட்டியினர் செய்தனர். விழாவில் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.* திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் காலபைரவர் சன்னதியில் சம்பக சஷ்டி விழா டிச.1ல் துவங்கியது. தினமும் கால பைரவருக்கு சிறப்பு அபிேஷகம் அதனை தொடர்ந்து பல்வேறு வகை அலங்காரம் செய்யபட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது.நேற்று சம்பக சஷ்டி விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை சம்ஹார பைரவர் குழு மற்றும் நகர் வளர்ச்சி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
01-Dec-2024
19-Nov-2024