ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாம்பக்குளம் பெண்கள் முற்றுகை
முதுகுளத்துார்; முதுகுளத்துார் அருகே சாம்பக்குளத்தை சேர்ந்த பெண்கள் 100 நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து முதுகுளத்துார் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முதுகுளத்துார் அருகே சாம்பக்குளம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக் கின்றனர். இங்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது முறையாக 100 நாள் வேலை வழங்காமல் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் வேலை வழங்கி வருவதாகவும் முறையாக வேலை வழங்காததை கண்டித்து சாம்பக் குளத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் முதுகுளத்துார் ஒன்றிய அலு வலகத்தில் முற்றுகை யிட்டனர். அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு முறையாக வழங்கப்படும் என்று கூறியதை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து அப் பகுதியைச் சேர்ந்த பெண்களுக்கு கூறியதாவது: சாம்பக்குளம் கிராமத்தில் 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை. வருகை பதிவேட்டில் வராதவர்களின் பெயர்களை பதிவிட்டு சம்பளம் வழங்கப்படுவதாகவும், 100 நாள் வேலை திட்டத்தில் 20 நாள் மட்டுமே வேலை வழங்குவதாகவும் அதற்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதி காரிகள் ஆய்வு செய்து 100 நாள் வேலை முறையாக வழங்கவும், சம்பளம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.