உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழையால் சென்னை ரயில் ரத்து

மழையால் சென்னை ரயில் ரத்து

ராமேஸ்வரம் : சென்னையில் கனமழை வெள்ளத்தால் மண்டபத்தில் இருந்து சென்னை செல்லும் இரு ரயில்கள் விழுப்புரம், தாம்பரத்தில் நிறுத்தப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பெஞ்சல் புயல் எதிரொலியாக விழுப்புரம் முதல் சென்னை வரை கனமழை பெய்தது. இதனால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ரயில் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை முதல் விழுப்புரம் வரை ரயில் போக்குவரத்தை தெற்கு ரயில்வே ரத்து செய்தது. ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து நேற்று மாலை 5:40 மணிக்கு புறப்படும் போர்ட் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்திலும், இரவு 8:50 மணிக்கு புறப்படும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை