உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நெற்பயிரில் செந்தாழை நோய் தாக்குதல்

நெற்பயிரில் செந்தாழை நோய் தாக்குதல்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டார பகுதியில், நெல் பயிரில் செந்தாழை நோய் தாக்குதலுக்கு நெல் பயிர் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம், சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். நெல் பயிர்கள் தற்போது வளர்ச்சி நிலையில் உள்ளன. இந்த நிலையில், நெல் வயல்களில் பயிர்கள் பசுமையாக இருக்க வேண்டிய நிலையில், செந்தாழை நோய் தாக்குதலால் தோகைகள் பாழுப்பு நிறமாகவும், பயிர் முழுவதும் வெண்மை நிற புள்ளிகள் ஏற்பட்டு வளர்ச்சி குன்றி வருகிறது. குறிப்பாக, புல்லமடை, ராமநாதமடை, சவேரியார் பட்டினம், சனவேலி, இருதயபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இந்நோய் தாக்குதல் அதிகரித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !