உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குழந்தை இறப்பு பெற்றோர் மீது வழக்கு

குழந்தை இறப்பு பெற்றோர் மீது வழக்கு

திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அரசத்துாரில் 8 மாதத்தில் பிறந்த பெண் குழந்தை 81 நாட்களில் இறந்து விட்டது. இதுகுறித்து அரசு டாக்டர் புகாரில் குழந்தையின் பெற்றோர் செல்வக்குமார் 41, டயானா 36, மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அரசத்துார் சமத்துவபுரத்தைச் சேர்ந்த கூலிதொழிலாளி செல்வகுமார் - டயானா தம்பதி வசிக்கின்றனர். ஏற்கனவே பெண், ஆண் குழந்தைகள் உள்ளனர். 3வது முறையாக டயானா கர்ப்பமுற்றார். சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டயானாவிற்கு 8 மாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. சிகிச்சை முடிந்து டயானா வீட்டிற்கு சென்றார். 81 நாட்கள் ஆனநிலையில் நேற்று முன்தினம் குழந்தை இறந்துவிட்டது.பெற்றோர்கள் கவனக்குறைவால் குழந்தை இறந்ததாக வெள்ளையபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரவீன்குமார், திருவாடானை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ