தண்ணீரில் மூழ்கி குழந்தை பலி
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் நம்புநாயகி அம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் மீனவர் கணேசமூர்த்தி. ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்தது. இவர்களின் ஒரே மகளான ஒன்றரை வயது சூசனா, நேற்று காலை வீட்டில் பெரிய பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் விளையாடியது. எதிர்பாராத விதமாக பாத்திரத்திற்கு விழுந்து தண்ணீரில் மூழ்கி குழந்தை துடிதுடித்து உயிரிழந்தது. தனுஷ்கோடி போலீசார் விசாரிக்கின்றனர்.