மேலும் செய்திகள்
டி.ஐ.ஜி., பொறுப்பேற்பு
01-Apr-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே எல்.கருங்குளத்தைச் சேர்ந்த அருள்ராஜன்35. இவர் நேற்று முன்தினம் மாலைதனது மனைவி அபிநயா 28, 10 மாத மகன்மர்ஜித் வீரா உடன் சென்னை செல்வதற்காக டூவீலரில் ராமநாதபுரம் நோக்கி சென்றார். அப்போது லாந்தை காலனி பஸ் நிறுத்தம் அருகே எதிரே டூவீலரில் செய்யாலுார் முகமதியாபுரம் அன்வர் மகன் அம்சத் அலிகான் 18 மற்றும் சாத்தையா மகன் அஜித் 20 ஆகியோர் வந்தனர். டூவீலர்கள்நேருக்குநேர் மோதிவிபத்து நடந்தது.இதில் அனைவரும் காயமடைந்து ராமநாதபுரம் அரசுமருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.தலையில் காயமடைந்த 10 மாத குழந்தை மர்ஜித் வீரா ஆம்புலன்சில் மதுரைக்குகொண்டு செல்லும் வழியில் பலியானார். ராமநாதபுரம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Apr-2025