உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குழந்தை தொழிலாளர் சிறுவன் தப்பி ஓட்டம்

குழந்தை தொழிலாளர் சிறுவன் தப்பி ஓட்டம்

திருவாடானை : குழந்தை தொழிலாளர் சிறுவனை அதிகாரிகள் மீட்க சென்ற போது சிறுவன் தப்பி ஓடினார்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வழிமுத்துார் கிராமத்தில் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. திருவாடானை போலீசார், வருவாய்த் துறையினர் வழிமத்துார் வயல்காட்டிற்கு சென்று அதே கிராமத்தை சேர்ந்த கருப்பையாவுக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை விசாரிக்க சென்றனர்.போலீசாரை பார்த்ததும் சிறுவன் தப்பி ஓடினார். சிறுவன் குறித்து விசாரித்த போது பட்டுக்கோட்டை அம்முனிசத்திரத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் என தெரிந்தது. ஆறு மாதமாக கிராமத்தில் தங்கி ஆடு மேய்த்து வந்துள்ளார். கருப்பையா கேரளாவிற்கு சென்று விட்டதால் அவரும் சிறுவனின் பெற்றோரும் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஆஜராக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை