மேலும் செய்திகள்
சிறுவனுக்கு தொல்லை வாலிபருக்கு 'போக்சோ'
16-Nov-2024
திருவாடானை: தப்பி ஓடிய குழந்தை தொழிலாளர் சிறுவன் பெற்றோரிடம் தஞ்சம் அடைந்தார்.திருவாடானை அருகே வழிமுத்துார் கிராமத்தில் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. திருவாடானை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் வழிமத்துார் சென்று கருப்பையா என்பவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை விசாரிக்க சென்றனர்.போலீசாரை பார்த்ததும் சிறுவன் தப்பி ஓடினார். சிறுவன் குறித்து விசாரித்த போது பட்டுக்கோட்டை அம்முனிசத்திரத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் என தெரிந்தது. ஆறு மாதமாக கிராமத்தில் தங்கி ஆடு மேய்த்துள்ளார். கருப்பையா மற்றும் சிறுவனின் பெற்றோரை திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஆஜராக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இந்நிலையில் தப்பி ஓடிய சிறுவன் பட்டுகோட்டை அம்முனிசத்திரத்தில் வசிக்கும் பெற்றோரிடம் தஞ்சம் அடைந்தார்.
16-Nov-2024