உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோவில் அருகே செயல்படும் கிறிஸ்துவ சபை

ராமேஸ்வரம் கோவில் அருகே செயல்படும் கிறிஸ்துவ சபை

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் நம்புநாயகி அம்மன் கோவில் அருகில், பக்தர்களுக்கு இடையூறாக அமைத்துள்ள, கிறிஸ்துவ சபையை அகற்றக் கோரி, ஹிந்து மக்கள் கட்சியினர் தனுஷ்கோடி போலீசில் புகார் செய்தனர். ஹிந்து மக்கள் கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பிரபாகரன், போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் உபகோவிலான நம்புநாயகி அம்மன் கோவில், புதுரோடு அருகில் உள்ளது. பழமையான இக்கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.ஹிந்து மீனவர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில், திடீரென கிறிஸ்துவ சபை அமைத்து ஒலிபெருக்கியில் பிரசாரம் செய்கின்றனர்.மேலும், மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களுக்கு உணவு, வீட்டு உபயோக பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்கின்றனர். 99 சதவீதம் ஹிந்து மக்கள் வசிக்கும் இப்பகுதியில், கிறிஸ்துவ சபை அமைக்க யார் அனுமதி அளித்தது. எனவே இந்த கிறிஸ்துவ சபையை அகற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ