உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் கிறிஸ்துமஸ் : சர்ச்சில்  சிறப்பு பிரார்த்தனை 

ராமநாதபுரத்தில் கிறிஸ்துமஸ் : சர்ச்சில்  சிறப்பு பிரார்த்தனை 

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிச.25ல் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. அன்று இரவு சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.ராமநாதபுரத்தில் புனித ஜெபமாலை அன்னை சர்ச்சில் நேற்று முன் தினம் இரவு 11:30 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சிவகங்கை மறை மாவட்ட முதன்மை குரு அருள் ஜோசப் தலைமையில் மறை வட்ட அதிபர் பாதிரியார் சிங்கராயர், உதவி பாதிரியார் கிரிதரன் ஆகியோர் சிறப்பு பிரார்த்தனை திருப்பலி நடத்தினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இரவு முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.* சாயல்குடி வேளாங்கண்ணி சர்ச்சில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர். அதிகாலை 12:00 மணிக்கு இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பைபிளில் இருந்து வேத இறை வசனங்கள் வாசிக்கப்பட்டன. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு சிறப்பு திருப்பலி நிறைவு பெற்றது. * முத்துப்பேட்டை புனித காணிக்கை அன்னை சர்ச்சில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஏராளமான பங்கு இறை மக்கள் கலந்து கொண்டனர். பாதிரியார் சிறப்பு ஆராதனைகளை நிறைவேற்றினார்.* கீழக்கரை பன்னாட்டார் தெருவில் உள்ள அந்தோணியார் சர்ச், பரதர் தெருவில் உள்ள அந்தோணியார் சர்ச் ஆகியவற்றில் சிறப்பு திருப்பலிகள் நடந்தது.* கீழக்கரை துாய பேதுரு சி.எஸ்.ஐ., சர்ச்சில் இரவு நேர சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குறித்த ஆராதனை நிகழ்ச்சியில் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.கடலாடி, மூக்கையூர், சிக்கல், மடத்தாக்குளம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் உள்ள சர்ச்சுகளில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை