முதுகுளத்துார் அருகே சர்ச் தேர் பவனி
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மட்டியரேந்தல் கிராமத்தில் புனித மரியன்னை, சூசையப்பர், மிக்கேல் அதிதுாதர் சர்ச் ஆண்டு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் சிறப்பு திருப்பலி நடந்தது.பாதிரியார் குருஸ் ஜோக்கின் தலைமை வகித்தார். புனித மரியன்னை, சூசையப்பர், மிக்கேல் அதிதுாதர் தேர் மின்னொளி அலங்காரத்தில் கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அப்போது மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பொதுமக்கள் ஜெபமாலை ஜெபித்தனர். மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.பின்பு பாதிரியார் எழில் சிறப்பு திருப்பலி நடத்தினர். விழாவில் மட்டியரேந்தல், தாளியரேந்தல் உட்பட சுற்றியுள்ள கிராமமக்கள் கலந்து கொண்டனர்.