உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சட்டவிரோத செயல்களில் ஈடுபடும்  விடுதிகள் மீது கடும் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை  

சட்டவிரோத செயல்களில் ஈடுபடும்  விடுதிகள் மீது கடும் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை  

ராமநாதபுரம் : ராமேஸ்வரம் தனியார் விடுதிகளில் உடை மாற்று அறைகளில்சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தால் அந்தவிடுதியை பூட்டி உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் எச்சரித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரை எதிரில்தனியார் விடுதி உடைமாற்றும் அறையில் ரகசிய கேமராவைத்து பதிவு செய்ததாக வந்த புகாரில் போலீசார் ஆய்வுசெய்து பெண்கள் உடைமாற்றும் அறையில் இருந்த கேமராக்கள்மற்றும் உடைமைகளை பறிமுதல் செய்து 2 பேரை கைதுசெய்தனர். விடுதியை நடத்துவதற்குரிய உரிமம் ரத்து செய்யப்படஉள்ளது.ஹிந்து சமய அறநிலையத்துறையால் பக்தர்களுக்காகராமேஸ்வரம் கோயில் உட்பிரகாரத்தில் தீர்த்தத்தொட்டி அருகேஒரு உடை மாற்றுவதற்கான கட்டடம், அக்னி தீர்த்தம் கடற்கரை எதிரில் ஒரு உடை மாற்றுவதற்கானகட்டடம் செயல்படுகிறது. அவ்விடங்களை பக்தர்கள்பயன்படுத்த வேண்டும்.தனியார் விடுதிகளில் செயல்பட்டு வரும் உடை மாற்று அறைகளில் சட்ட விரோதசெயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தால் அந்த விடுதிஉரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விடுதியைபூட்டி உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ