கல்லுாரி மாணவர்கள் ரத்த தானம்
ராமநாதபுரம், : ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி நிறுவனர் டாக்டர் இ.எம்.அப்துல்லா பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் அரசு மருத்தவக்கல்லுாரி மருத்துவமனையில் கல்லுாரி மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து ரத்த தான முகாம் நடத்தினர்.கல்லுாரி தாளாளர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா தலைமை வகித்து மாணவர்கள் ரத்த தானம் வழங்குவதன் அவசியத்தை விளக்கினார். கல்லுாரி முதல்வர் பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளரும் மின்னியல், மின்ணணுவியல் பேராசிரியர் நாகநாதன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.