உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்லுாரியில் வண்ணத்திருவிழா

கல்லுாரியில் வண்ணத்திருவிழா

கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் கல்லுாரிகளுக்கு இடையிலான வண்ணத் திருவிழா நடந்தது.கலை மற்றும் அறிவுத்திறன் போட்டிகள் நடந்தது. இதில் 10 கல்லுாரிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். நடனம், மவுன மொழி, வினாடி வினா, விளம்பரம் உருவாக்குதல், பாட்டு போட்டி, மெஹந்தி இடுதல், நெருப்பில்லா சமையல், பென்சில் ஓவிய போட்டி, மணப்பெண் அலங்காரம் உள்ளிட்டவைகள் நடந்தது.கல்லுாரி முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். முதுகலை வணிகவியல் துறை தலைவர் செல்வ கணேசன் வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவர்களின் புள்ளிகளின் அடிப்படையில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி முதலிடம், மானாமதுரை எம்.ஏ.கே.மகளிர் கல்லுாரி 2ம் இடம் பிடித்தது.வணிகவியல் பேராசிரியர் சித்திரலேகா, நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர் மகேஸ்வரன், முனிய சத்யா, கமலவேணி, சந்திரசேகர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை