உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் முன் அறிவிப்பின்றி மின்தடை; மருத்துவமனையில் நோயாளிகள், மக்கள் அவதி

ராமநாதபுரத்தில் முன் அறிவிப்பின்றி மின்தடை; மருத்துவமனையில் நோயாளிகள், மக்கள் அவதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் முன்னறிவிப்பின்றி மின்தடை ஏற்படுவதால் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள், பொதுமக்கள் வெப்பசலனத்தால் மிகவும் சிரமப்பட்டனர். இப்பிரச்னைக்கு மின்வாரிய அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்.ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான், ஆர்.எஸ்.மடை துணை மின்நிலையத்தில் இருந்து நகர் பகுதிக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. டவுன், புறநகர் என மின்மாற்றிகள் பிரிக்கப்பட்டு மின் விநியோகம் முறைப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சரிவர பராமரிக்கப்படாமல் அடிக்கடி மின்மாற்றிகள், ஜம்பர்கள், பீங்கான் பழுதாகி திடீர் மின்தடை ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது. ராமநாதபுரம் நகரில் காலையில் 5:00 மணிக்கு மின்தடை ஏற்பட்டு காலை 6:30 மணி வரையிலும், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் காலை 7:30 மணி வரை மின்தடை ஏற்பட்டது.கோடை வெயில் ராமநாதபுரத்தில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், பொதுமக்கள் வெப்பசலனத்தால் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.குறிப்பாக மின்சாரம் நிறுத்தப்பட்டதால் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உடனடியாக ஜெனரேட்டர் இயக்கப்படாமல் காலையில் ஒன்றரை மணி நேரம் வரை நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டனர்.மாவட்டத்தில் இது போன்று அடிக்கடி மின்சாரம் தடை படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். இப்பிரச்னைக்கு மின்வாரிய அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்திற்கு செல்லும் வழியில் 110 கே.வி., லைனில் ஜம்பர் கட்டாகி பழுது ஏற்பட்டது.பழுது எந்த இடத்தில் ஏற்பட்டது என்பதை கண்டறிந்து சரிசெய்யப்பட்டு மின் விநியோகம் வழங்கப்பட்டது. அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான மின்விநியோகம் வழங்கப்படுகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி