கல்லுாரி முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா
ராமநாதபுரம்; ராமநாதபுரம் கூட்டாம்புளி அருகே செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் வகுப்புகள் துவக்க விழா நடந்தது. தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா முன்னிலை வகித்தார். முதல்வர் பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.சிறப்பு விருந்தினர் உத்வேக பேச்சாளர் டாக்டர் ஜெகன் சிறப்புரை ஆற்றினார். கல்லுாரியின் ஆட்சிக்குழு உறுப்பினர்ஹாரிஸ் அப்துல்லா, துறை தலைவர்கள் தமீமா,தகவல் தொழில்நுட்ப துறை வினோத் குமார், வணிக நிர்வாகவியல் துறை ஆதிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.