உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விசைப்படகு பராமரிப்பு பணிகள் துவக்கம்

விசைப்படகு பராமரிப்பு பணிகள் துவக்கம்

தொண்டி: மீன்பிடி தடை காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.தொண்டி, சோலியக்குடியில் 70க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. மீன்வளத்தை பாதுகாக்கவும், இனப்பெருக்க காலத்தை உறுதிப்படுத்தவும் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்.,15 ல் தடை காலம் துவங்கி ஜூன் 14ல் முடிவடையும். இந்த தடை காலத்தில் படகின் இயந்திரங்கள், உதிரிபாகங்கள் போன்றவற்றை சரிபார்த்து சீரமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சோலியக்குடி மீனவர்கள் கூறியதாவது:தடைகாலத்தில் படகுகளை மேம்படுத்தி புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்தலாம். மீன்பிடிக்க பயன்படுத்தும் வலைகள், கருவிகள் மற்றும் பிற உபகரணங்களையும் பழுது பார்த்து சீரமைப்போம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை