மல்லை சத்யா உள்ளிட்ட நான்கு பேர் மீது புகார்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் சுரேஷ் உட்பட நிர்வாகிகள் வைகோ, அவரது மகன் துரை பொது வாழ்க்கைக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக செயல்படுவதாக மல்லை சத்யா உட்பட நான்கு பேர் மீது எஸ்.பி., சந்தீஷிடம் புகார் மனு அளித்துள்ளனர். மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியை சேர்ந்த பஷீர், கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளையை சேர்ந்த நாஞ்சில் சம்பத், திருப்பூர் மாவட்டம் துரைசாமி, காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் மல்லை சத்யா ஆகியோர் எங்கள் கட்சியின் பொது செயலாளர் வைகோ, திருச்சி எம்.பி., துரை மீது சமூக வலைதளங்களில் விஷம கருத்துக்களையும், ஜாதி கலவரத்தை துாண்டும் விதமாகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதனை முடக்கம் செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை அழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.