உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் கோயில் அதிகாரிக்கு அவமரியாதை போலீசில் புகார்

ராமேஸ்வரத்தில் கோயில் அதிகாரிக்கு அவமரியாதை போலீசில் புகார்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் அதிகாரியை தரக்குறைவாக பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் மீது போலீசில் கோயில் இணை ஆணையர் புகார் செய்தார்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையர் செல்லத்துரை கோயில் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது :12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக உள்ள ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் இலவச தரிசனம், கட்டண தரிசனம் என இருவழியில் தரிசிக்கின்றனர். இதில் அரசு உத்தரவின்றி ராமேஸ்வரம் பகுதி மக்கள் கட்டணமின்றி மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் வரும் வழியில் தரிசிக்கின்றனர்.மே 24ல் ஹிந்து மக்கள் கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பிரபாகரன், முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் தரிசிக்க அனுமதிக்க கோரி அங்குள்ள கோயில் ஊழியர்களையும், என்னையும் அவமரியாதையாக பேசி உள்ளார்.மேலும் ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். இதுகுறித்து வீடியோ பரவுகிறது. இதனால் பக்தர்கள் மன நிம்மதியின்றி சுவாமி தரிசனம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. எனவே ஹிந்து மக்கள் கட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பிரபாகரன், ராமேஸ்வரம் நீதிமன்ற சட்டப்பணி குழு தலைவரிடம் அளித்த புகார் மனுவில், இக்கோயிலில் உள்ளூர் மக்கள் திருமண நாள், பிறந்த நாள் மற்றும் சுபநிகழ்ச்சி நாட்களில் கட்டணம் இன்றி பாரம்பரியமாக தரிசிக்கின்றனர். ஆனால் தற்காலிக கோயில் ஊழியர்கள் விதிமீறி பக்தர்களிடம் பணம் வசூலித்து கட்டண வரிசையில் அழைத்து செல்கின்றனர்.இதற்கு இடையூறாக உள்ள உள்ளூர் பக்தர்களை தரக்குறைவாக பேசி அவமானப்படுத்துகின்றனர். மேலும் தற்போதைய கோயில் இணை ஆணையர் உள்ளூர் மக்களை வழக்கமாக செல்லும் வரிசையில் தரிசிக்க அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளார்.எனவே உள்ளூர் மக்கள் உரிமையை மீட்டு பாரம்பரிய முறைப்படி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ