உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு.. 98940 09443

சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு.. 98940 09443

கால்நடைகள் தொல்லை ராமநாதபுரம் நகரில் சாலைகளில் வளர்ப்பு ஆடு, மாடுகள் திரிவதால் விபத்துக்கள் நடக்கிறது. அவற்றை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - அஸ்மாபாக் அன்வர்தீன், சிகில் ராஜ வீதி, ராமநாதபுரம். நாய்களுக்கு கு.க., அவசியம் ராமநாதபுரம் அரண்மனை பின்புறம் பானுமதி நாச்சியார் தெரு, முகவை ஊருணி கரைகளில் ஏராளமான தெரு நாய்கள் திரிகின்றன. வாகன ஓட்டிகள், மக்கள் அச்சப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும். - மனோகரன், முகவை ஊருணி கிழக்கு தெரு, ராமநாதபுரம். தெருநாய்கள் தொல்லை ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை மெயின் ரோட்டில் திரியும் நாய்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அவற்றை பிடித்து தடுப்பூசி இடவேண்டும். - குருநாதன்சக்கரகோட்டை. குப்பையால் சுகாதாரக்கேடு ராமநாதபுரம் மதுரை ரோட்டோரத்தில் குப்பையை கொட்டி எரிப்பதால் புகை பரவி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பை கொட்டுவதை தடுத்து எரிப்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - மணிமேகலை லாந்தை ஆக்கிரமிப்பை அகற்றுங்கள் சத்திரக்குடி பஸ் ஸ்டாப் அருகே ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்கள், ரோட்டோர கடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - செல்வம்சத்திரக்குடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ