உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வயல்களில் வழக்கத்தை விட களை அதிகரிப்பால் கவலை

வயல்களில் வழக்கத்தை விட களை அதிகரிப்பால் கவலை

திருவாடானை: திருவாடானை பகுதியில் விட்டு விட்டு பெய்த மழையால் நெல் வயல்களில் களைகள் அதிகளவில் வளர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருவாடானை பகுதியில் விவசாயப் பணிகள் நடந்து வரும் நிலையில் விட்டு, விட்டு பெய்து வரும் மழையால் நெற்பயிர்களுடன் சேர்ந்து களைகள் அதிகளவில் வளர்ந்து வருகின்றன. நெற்பயிர்கள் வளரும் ஆரம்ப கட்டத்திலேயே களைகள் அதிகளவில் முளைத்து விடுவதால் மண்ணிலுள்ள சத்துக்களையும், நீரையும் களைகள் உறிஞ்சிக் கொள்கின்றன. இதனால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். களைகளை அழித்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். களைக்கொல்லி மருந்துகளை கைத்தெளிப்பான் மூலம் கூலி ஆட்களை வைத்து களைகளை அழிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். களைகள் முளைக்கும் போதே உரிய மருந்துகளை தெளிப்பதன் மூலம் அவற்றை மண்ணோடு மக்கச் செய்து பயிர்களை பாதுகாக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ