உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஓட்டல்களில் சோதனை நடத்தி அபராதம் விதிப்பு

ஓட்டல்களில் சோதனை நடத்தி அபராதம் விதிப்பு

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அபராதம் விதித்தனர். பரமக்குடி நகரில் பரோட்டா கடைகள் உட்பட உணவகங்கள் ஏராளமாக பெருகி விட்டது. ஒவ்வொரு கடைகள் உட்பட அனைத்து இடங்களிலும் சுவைக்காக அஜினோமோட்டோ உள்ளிட்டவற்றை சேர்த்து சமைக்கின்றனர். மேலும் சுகாதாரமற்ற முறையில் பல ஓட்டல்கள் உள்ளன. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் முத்துசாமி தலைமையில் பரமக்குடியில் ஒரு சில கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் வகையில் இருந்த ஓட்டல்களுக்கு 1000 மற்றும் 2000 ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர். இந்த ஆய்வு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ