உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

கீழக்கரை: கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளியில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவி ரபியத்துல் அஸ்கா 500க்கு 478 மதிப்பெண்கள் பெற்றார். மாணவி பரீசா மீரா 476 மதிப்பெண்களும், அய்க்பா 467 மதிப்பெண்களும் பெற்றார். இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி மாணவி தீனுல் மஹ்புல்லா, 500க்கு 468 மதிப்பெண்களும், ரசூல் அஸ்மா 463 மதிப்பெண்களும், அலிமல் ஜஹாதியா 458 மதிப்பெண்களும் பெற்றார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் பாராட்டி பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை