எறிபந்து போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
கீழக்கரை: பள்ளி கல்வித்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் உச்சிப்புளியில் நடந்தது. இப்போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான எறிபந்து போட்டியில் கீழக்கரை பேர்ல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்று முதலிடம் பிடித்தனர். நவ., 19ல் திருவண்ணாமலையில் நடக்கும் மாநில அளவிலான எறிபந்து போட்டியில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளர் ஷரிபா அஸீஸ், சீதக்காதி அறக்கட்டளை பொது மேலாளர் சேக் தாவூத் கான், பள்ளி முதல்வர் ஷாநவாஸ், நிர்வாக அலுவலர் சிராஜுதீன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பாராட்டினர்.