மேலும் செய்திகள்
பரமக்குடியில் காங்., கட்சி நடை பயணம்
04-Oct-2024
ராமநாதபுரம்: ராகுல் மீது பா.ஜ.,வினர் அவதுாறு பிரசாரம் செய்வது குறித்து மக்களிடையே விழிப்புணர்வுஏற்படுத்த ராமநாதபுரத்தில் காங்., சார்பில் பிரசார நடை பயணம் நடந்தது. ராமநாதபுரம் அரண்மனை முன்பிருந்து துவங்கிய பிரசார நடை பயணத்திற்கு கரு.மாணிக்கம் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் இதயத்துல்லா, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, தேசிய மீனவர் காங்., தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் பேசினர்.மாநில செயலாளர் ஆனந்தகுமார், நகராட்சி கவுன்சிலர் மணிகண்டன், மாவட்ட மகளிர் காங்., தலைவர் ராமலட்சுமி, வட்டார தலைவர்கள் சேகர், சேதுபாண்டியன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். நகர் தலைவர் கோபி நன்றி கூறினார்.
04-Oct-2024