உள்ளூர் செய்திகள்

காங்., ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்., மாவட்ட தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தார். இதில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து செய்ததை கண்டித்தும், காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு மத்தியரசிற்கு கண்டணம் தெரிவித்தும் கோஷமிட்டனர். காங்., மாநில செயலாளர் ரங்கநாதன், வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், சுப்பிரமணியன், வேல்சாமி, வட்டார, நகர, பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை