பரமக்குடியில் காங்., கண்டன ஆர்ப்பாட்டம்
பரமக்குடி : பரமக்குடியில் காங்., கட்சியினர் உட்பட பல்வேறு அமைப்பினர் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வக்கீல் சங்க தலைவர் பூமிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பரமக்குடி ஐந்து முனை ரோடு பகுதியில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் அமித்ஷாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். தொடர்ந்து நேற்று மாலை பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் காங்., கட்சி சார்பில் வக்கீல் சரவணகாந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து பேசினர். ராகுல் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தினர். இதில் நிர்வாகிகள் ஆலம், கிருஷ்ணராஜ், வக்கீல் இளமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.