உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் மத்திய அரசுப்பள்ளி கட்டுமானத்திற்கு 2 ஆண்டுகளாக பிளான் அப்ரூவல் தராமல் இழுத்தடிப்பு

ராமேஸ்வரத்தில் மத்திய அரசுப்பள்ளி கட்டுமானத்திற்கு 2 ஆண்டுகளாக பிளான் அப்ரூவல் தராமல் இழுத்தடிப்பு

ராமேஸ்வரத்தில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி 1 முதல் 10ம் வகுப்பு வரை செயல்படுகிறது. இங்கு 420 மாணவர்கள் படிக்கின்றனர்.இந்நிலையில் பள்ளிக்கு தனியாக கட்டட வசதி இல்லை. கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பள்ளி செயல்படுகிறது. இங்கு 4 கழிப்பறைகள்மட்டும் உள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள்அவதிக்குள்ளாகின்றனர். போதிய வகுப்பறை இன்றி இட நெருக்கடியிலும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். நேற்று முன்தினம் இறை வணக்கம் பாட வரிசையில் நின்ற மாணவர்களுக்கு மத்தியில் பாம்பு புகுந்ததால் மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.

ரூ. 4 கோடி ஒதுக்கீடு

மாணவர்கள் நலன் கருதி மத்திய அரசு இப்பள்ளிக்கு 8.40 ஏக்கர் நிலம் வாங்கியது. இங்கு வகுப்பறை கட்ட 2 ஆண்டுகளுக்கு முன் ரூ. 4 கோடி ஒதுக்கிய நிலையில் ஒப்பந்ததாரர் சுற்றுச்சுவர் அமைத்தார். பள்ளி கட்டடத்திற்கு பிளான் அப்ரூவல் பெற ராமநாதபுரம் நகர்ப்புற கட்டட வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் பள்ளி நிர்வாகம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தது. ஆனால் இரண்டாண்டுகளாகியும் அனுமதி வழங்காமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால்சுற்றுச்சுவர் கட்டிய நிலையில் பள்ளி கட்டட கட்டுமானப் பணி கானல் நீராகிப் போனது.மத்திய அரசுடன் தமிழக அரசு மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில் மாநில அரசு அதிகாரிகள் கட்டட அனுமதிக்கு முட்டுக்கட்டை போட்டு மாணவர்களின் கல்வியில் விளையாடுவது வேதனைக்குரியது என பெற்றோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ