மேலும் செய்திகள்
ஊத்தங்கரையில் விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்
19-Jul-2025
கமுதி: கமுதியில் வட்டார அளவிலான அட்மா திட்டத்தில் விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. வேளாண் துணை இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டார வேளாண் உதவி இயக்குனர் கேசவராமன், அட்மா திட்ட விவசாயிகளின் ஆலோசனை குழு தலைவர் சண்முகநாதன் முன்னிலை வகித்தனர். வேளாண் துறை சார்பில் அரசின் பாசன திட்டங்களில் மானியங்கள், இலவச திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர். பல்வேறு திட்டங்களில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கூறப்பட்டது. ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சுபாஷ் சந்திரபோஸ் செய்தார். கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலாளர் மணிமொழி நன்றி கூறினார்.
19-Jul-2025