சாயல்குடியில் தொடர் மின்தடை
சாயல்குடி: சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவு மின்தடை ஏற்படுவதால் மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.காலை முதல் இரவு வரை அறிவிக்கப்படாத மின்தடையால் வியாபாரிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகின்றனர். கடலாடி முன்னாள் யூனியன் துணைத் தலைவர் ஆர்த்தி கூறியதாவது: சாயல்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு மின்தடை செய்யப்படுகிறது. மாணவர்களுக்கு தேவையான கல்வி சான்றிதழ் உள்ளிட்டவைகளை ஜெராக்ஸ் எடுக்க முடியாமல் பெரும் சிரமத்தை பெற்றோர் சந்திக்கின்றனர்.இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்தடை நிலவுகிறது. கன்னிராஜபுரம் ஊராட்சி ரோஜ்மா நகர் கடற்கரையோரம் மின்கம்பத்தில் தெருவிளக்கு எரியாமல் இருள் சூழ்ந்துள்ளது.மின்தடை உள்ள பகுதிகளில் கூடுதல் மின் டிரான்ஸ்பார்மர் அமைத்து குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை சாயல்குடி துணை மின் நிலையத்தினர் எடுக்க வேண்டும் என்றார்.