உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரையில் தொடர் மின்தடை

கீழக்கரையில் தொடர் மின்தடை

கீழக்கரை: கீழக்கரை நகர் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை 15க்கும் மேற்பட்ட தடவை தொடர் மின்தடை ஏற்பட்டது.கீழக்கரை நகரில் சமீப காலமாக அடிக்கடி அறிவிக்கப்படாத நிலையில் தொடர் மின்தடை நிகழ்கிறது. இதனால் பொதுமக்கள், வணிகர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். தன்னார்வலர்கள் கூறியதாவது:கீழக்கரை துணை மின் நிலையத்திலிருந்து கீழக்கரை நகர் பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர் மின்தடை மற்றும் முன்னறிவிப்பின்றி மின்தடை செய்கின்றனர்.இதனால் பொதுமக்கள் தொடர் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே கீழக்கரை துணை மின் நிலையத்தில் கூடுதல் திறன் கொண்ட மின் டிரான்ஸ்பார்மர்களை அமைத்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி