மேலும் செய்திகள்
தமிழ்புலிகள் 17 பேர் கைது
03-Dec-2024
ராமநாதபுரம், : வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத தி.மு.க., அரசை கண்டித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ம.க., வினர் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினர்.கிழக்கு மாவட்ட செயலாளர் அக்கீம், மாவட்ட செயலாளர் மேற்கு தவ.அஜித் தலைமை வகித்தனர். பசுமை தாயகம் மாநில துணைச் செயலாளர் கர்ணமகாராஜா முன்னிலை வகித்தார். மண்டபம் ஒன்றிய செயலாளர் மக்தும்கான் வரவேற்றார்.சட்டசபை தொகுதி செயலாளர்கள் ராமநாதபுரம் பாலகுமார், திருவாடானை முனியசாமி, முதுகுளத்துார் ரமேஷ், பரமக்குடி மகேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். இட ஒதுக்கீட்டில் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத தி.மு.க., அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
03-Dec-2024