உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம்

வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியும், அலைபேசி வீடியோ கேம்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் இந்திய கூட்டமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியும், அலைபேசி மற்றும் வீடியோ கேம்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் இந்திய கூட்டமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதன்படி கேம் சம்பந்தமான புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தவும், மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை கேமிங் துறையில் உருவாக்கவும், பேராசிரியர்களுக்கு கேம் குறித்து சிறப்பு பயிற்சிகள் அளிக்க உள்ளனர்.மேலும் இதே துறையில் புத்தாக்க நிறுவனங்களை உருவாக்க செய்யது அம்மாள் இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். கல்லுாரி முதல்வர் பெரியசாமி மற்றும் பேராசிரியர் கார்த்திகேயன், புனே லக்ஷய டிஜிட்டல் ராஜூ பட்டில், மும்பை டிஜிட்டல் வூட்ஸ் சைதன்யா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை