உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பருத்தி பஞ்சு கிலோ ரூ.56: விவசாயிகள் விரக்தி

பருத்தி பஞ்சு கிலோ ரூ.56: விவசாயிகள் விரக்தி

ராமநாதபுரம் : பருத்தி சீசன் முடிந்து நெல் சாகுபடி துவங்கும் நிலையிலும்விலை உயர்வின்றி பஞ்சு கிலோ ரூ.56க்கு விற்கிறது. சீசன் இல்லாத போது ரூ.100க்கு மேல் விலை கிடைக்கும் என எதிர்பார்த்து இருப்பு வைத்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் சத்திரக்குடி, பரமக்குடி, உத்திரகோசமங்கை, பாண்டியூர், கமுதி, முதுகுளத்துார் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்கின்றனர். இவ்வாண்டு போதிய தண்ணீர் இல்லாத போதும்ஆழ்குழாய் பாசனத்தில் பருத்தியைபலர் சாகுபடி செய்தனர். பஞ்சுகளை கமிஷன் மண்டி வியாபாரிகள் கொள்முதல் செய்து கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் அனுப்புகின்றனர்.செப்., - நவ., மாதம் மழைக்காலத்தில் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் பருத்தியை இருப்பு வைத்தனர். ஆனால் மழை இல்லாதாதல் வெளியூர் பஞ்சு வரத்து காரணமாக விலைச் சரிவடைந்துகிலோ ரூ.56க்கு கமிஷன் மண்டியில் விலை போகிறது.கடந்த ஆண்டு பஞ்சு கிலோ ரூ.100க்கு மேல் விற்றது.இதனால் ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் வரை செலவு செய்தும் அதற்குரிய விலை கிடைக்கவில்லை.நெல், கொப்பரை போல பருத்தி பஞ்சுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ