உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இடையூறு விளைவிக்கும் நாய்களை கட்டுப்படுத்த கவுன்சிலர் கோரிக்கை; ஒருவர் வெளிநடப்பு

இடையூறு விளைவிக்கும் நாய்களை கட்டுப்படுத்த கவுன்சிலர் கோரிக்கை; ஒருவர் வெளிநடப்பு

கீழக்கரை; கீழக்கரை நகராட்சியில் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஒரு கவுன்சிலர் வெளி நடப்பு செய்தார்.கீழக்கரை நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமை வகித்தார். கமிஷனர் ரங்கநாயகி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஹமீது சுல்தான் வரவேற்றார். கணக்காளர் தமிழ்ச்செல்வன் தீர்மானங்களை வாசித்தார்.கவுன்சிலர் சூரியகலா : கீழக்கரையில் நாய்கள் பிரச்னை அதிகமாக உள்ளது. பொதுமக்களை விரட்டி கடிக்கிறது.எனது வார்டிற்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி சார்பில் நிகழ்ச்சி நடத்துகின்றனர். அது குறித்த விபரம் எதுவுமே தெரியப்படுத்துவதில்லை.பைரோஸ் பாத்திமா (தி.மு.க.,): தெருவிளக்குகள் பல இடங்களில் எரியாமல் உள்ளது.மீரான் அலி (தி.மு.க.,): மணல்மேடு பகுதியில் சேதமடைந்த இரண்டு வாட்டர் டேங்க் அகற்றும் பணி நடந்து வருகிறது. அதுவரை தண்ணீர் வினியோகம் கிடையாது. 30ம் தேதிக்குப் பிறகு பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என்றார்.நசிருதீன் (தி.மு.க.,) :கீழக்கரையில் தண்ணீர் டேங்கில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் அதனை கண்காணிக்க வேண்டிய உதவியாளர் இல்லாத நிலையில் இப்பகுதியில் தொடர் விபத்து ஏற்படுகிறது. எனவே நகராட்சி சார்பில் உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும். டேங்கர் மூலம் விநியோகம் செய்யப்படும் தண்ணீரில் குளோரினேஷன் செய்யப்பட வேண்டும்.பவித்ரா (அ.தி.மு.க.,): 10வது வார்டு பகுதியில் பேவர் பிளாக் கற்கள் அமைக்கவில்லை. பல மாதங்களாக கோரிக்கை வைக்கிறேன் என்றார்.நகராட்சி தலைவர்: ஒரு சில கவுன்சிலர்கள் நன்றி சொல்லா விட்டாலும் பரவாயில்லை. துாற்ற வேண்டாம். படிப்படியாக குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.ஹாஜா சுஐபு.(தி.மு.க.,): புதிய வரி செலுத்த மற்றும் வரி செலுத்துவோரின் பெயர் மாற்றம் செய்தாலும் அவர்களுக்கான வரி செலுத்துவதில் தொடர் தாமதம் ஏற்படுகிறது. வரி வசூலித்தால் மட்டுமே பொது நிதி மூலம் வருவாய் ஈட்ட முடியும் என்றார்.கவுன்சிலர் சேக் உசேன்: மற்ற எல்லா கவுன்சிலர்களுக்கும் தகவல் தெரிவிக்கின்றீர்கள். ஆனால் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் சார்பில் உள்ள இரண்டு கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. ஆனால் எம்.எல்.ஏ., நிதி ஒதுக்கிய விபரம் தெரியவில்லை. ஏன், இந்த பாகுபாடு. பொதுமக்களுக்காக நான் பேசிய பேச்சுக்களை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை இதை கண்டித்து நான் வழிநடப்பு செய்கிறேன் என்று கூறியபடி சென்றார்.தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி