உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாடு உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம்

மாடு உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம்

திருவாடானை : திருவாடானை, தொண்டி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க ஊராட்சி செயலர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவர் எஸ்.டி.பி.ஐ., மாவட்டச் செயலாளராக உள்ளார். இவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் திரிவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள் ஊராட்சி செயலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் கால்நடைகள் ரோடுகளில் குறுக்கே செல்லும் போது வாகனங்களில் சிக்கி விபத்தை ஏற்படுத்துகின்றன. அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் காயம், உயிர் இழப்புகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கால்நடைகள் ரோடுகளில் சுற்றித் திரிவதை தடுக்கும் பொருட்டு கால்நடை உரிமையாளர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவின்படி அறிவுறுத்தபட்டுள்ளது என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !