உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் உண்ணாவிரதப் போராட்டம்

சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் உண்ணாவிரதப் போராட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில்பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது.மாநில இணை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார்.தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை உண்ணாவிரதம் இருந்தனர்.வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்ட தலைவர் பழனிக்குமார், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் மாவட்ட செயலாளர் பிரகாஷ்பாபு, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சிவபாலன், வி.ஏ.ஓ.,க்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ