உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோடை விடுமுறை எதிரொலி: கோயில்களில் கூட்டம்

கோடை விடுமுறை எதிரொலி: கோயில்களில் கூட்டம்

திருப்புல்லாணி: கோடை விடுமுறைகாரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட ஆன்மிக தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருகின்றனர்.திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில், தேவிபட்டினம் நவபாஷாணம், சேதுக்கரை, ராமேஸ்வரம், திருவாடானை உள்ளிட்ட இடங்களுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். திருப்புல்லாணி வடக்குரத வீதியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் பக்தர்கள் செய்து வருகின்றனர். எனவே பக்தர்களுக்கு வசதியாக போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு போலீசார் நியமிக்க வேண்டும். குடிநீர் வசதி உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் செய்துதர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை