உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வெட்டுக்குளம் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு

வெட்டுக்குளம் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு

தினமலர் செய்தி எதிரொலிஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் சித்துார்வாடி ஊராட்சி வெட்டுக்குளம் பகுதியில் நுாறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் ரேஷன் கடை இல்லாததால் 3 கி.மீ.,ல் உள்ள சித்துார்வாடி சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதனால் முதியவர்கள், பெண்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.இதுகுறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக வெட்டுக்குளம் பகுதியில் ரேஷன் கடைக்கு என தனியாக கட்டடம் கட்டப்பட்டு அதில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு ஊராட்சி தலைவர் ராணி தலைமை வகித்தார். தி.மு.க.,ஒன்றிய செயலாளர் மோகன், முன்னாள் ஊராட்சி தலைவர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். தாசில்தார் வரதராஜன் ரேஷன் கடை கட்டடத்தை திறந்து வைத்தார். வட்ட வழங்க அலுவலர் ஹேமாவதி, பிச்சங்குறிச்சி ஊராட்சிதலைவர் நாகமுத்து கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை