பாம்பனில் 1ம் எண் புயல் கூண்டு
ராமேஸ்வரம்:வங்கக் கடலில் உருவான குறைவழுத்த தாழ்வு மண்டலத்தால் பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக்கடலில் ஒடிசா கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. இதனால் நேற்று காலை முதல் தமிழக கடலோரத்தில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. தொலைதுார புயல் எச்சரிக்கையாக நேற்று காலை ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பாம்பன் கடற்கரையில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டது.