உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் சூறாவளி மழை 3-ம் நாளாக மீனவர்களுக்கு தடை

ராமேஸ்வரத்தில் சூறாவளி மழை 3-ம் நாளாக மீனவர்களுக்கு தடை

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் மூன்றாம் நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலால் 3 நாட்களாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ராட்சத அலைகள் ஏற்பட்டு ராமேஸ்வரம், பாம்பன் கடற்கரையில் ஆக்ரோஷமாக மோதின.மேலும் பாம்பன் தெற்குவாடி கடலோரத்தில் உள்ள மீனவர் குடிசை வீடுகளை அலைகள் சேதப்படுத்தின. மண்டபம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த மண் அள்ளும் கப்பல் ராட்சத அலையில் சிக்கி மூழ்கியது.3ம் நாளான நேற்றும் ராமேஸ்வரம் பகுதியில் தொடர் மழையால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் 3ம் நாளாக மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டதால் 1500 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை