உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோவிலில் சேதம் அறநிலைய துறை அலட்சியம்

ராமேஸ்வரம் கோவிலில் சேதம் அறநிலைய துறை அலட்சியம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலில் சேதமடைந்த விமானத்தை சீரமைக்காமல், ஹிந்து சமய அறநிலைய துறையினர் அலட்சியமாக உள்ளதாக, பக்தர்கள் கூறுகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், 2016ல் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், கோவிலின் மேற்கு பகுதி 3ம் பிரகாரத்தில் உள்ள, அக்னி ஈஸ்வரர் சன்னிதி கோபுர விமானத்தில், சிமென்ட் கலவை பெயர்ந்து சேதமடைந்துள்ளது. இதை சரி செய்ய பக்தர்கள் பல முறை வலியுறுத்தியும், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. ராமநாதபுர ம் மண்டல வி.எச்.பி., அமைப்பாளர் அ.சரவணன் கூறுகையில், ''ராமேஸ்வரம் கோவிலில் உண்டியல் காணிக்கை, தீர்த்தம் நீராடல், தரிசன கட்டணம் என ஓராண்டுக்கு 30 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. அக்னி ஈஸ்வரர் சன்னிதி விமானம் சேதமடைந்து பல மாதங்கள் ஆகியும் அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ''கோவில் வருவாய்க்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக அரசு, கோவில் பராமரிப்பையும் கவனிக்க வேண்டும். எனவே, ராமேஸ்வரம் கோவிலை மத்திய தொல்லியல் துறை கையகப்படுத்தி கலாசாரம், பண்பாடுகளை பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !